
பலத்த மழை மற்றும் வௌ்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2271 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
33 வீடுகள் அனர்த்தத்தில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
212 குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.