சிலை தையல் பயிற்சி நிலையதில் தையல் பயிற்சி, ஆரி பயிற்சி, எம்பிராய்டரி பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று காலை வடமராட்சி பருத்தித்துறை வியாபாரி பொது மண்டபத்தில் சிபூ தையல் பயிற்சியகத்தின் நிர்வாகியும், தையல் பயிற்சி ஆசிரியருமான திருமதி நிதர்சன் சிபூசா தலமையில் காலை 11 மணியளவில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விதையிலிருந்து விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது.
மங்கல சுடர்களினை நிகழ்வின் பிரதம விருந்தினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தன், சிறப்பு விருந்தினர்களான பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் அருணகிரி வினோதன், கௌரவ விருந்தினர்களான பருத்தித்துறை போலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உதவி போலீஸ் பரிசோதகர் ஆர் எம் ரத்தநாயக்க, வியாபாரி மூலை கிராம சேவகர் திருமதி பத்மலதா குருபரன், தையல் போதனா ஆசிரியர் திருமதி இன்பராணி வரதராசா, சாயி அழகிக்கலை நிறுவன இயக்குநர் திருமதி சினிதா சூரியகுமார், வியாபாரி மூலை மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி மகேஸ்வரன் மகாதேவன், சிபூ தையல் பயிற்சி நிலைய இயக்குநர் திருமதி நிதர்சன் சிபூசா ஆகியோர் ஏற்றிவைத்ததுடன்
தையல் பயிற்சி, ஆரிவேக்ஸ், எம்பிராய்டரி பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவிகள், பெற்றோர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.