நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு : குவிக்கப்படும் பெருமளவு பொலிஸார்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

எதிர்வரும் நத்தார் பண்டிகை தினமன்று கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாளை முதல் நீண்ட தூர சேவைகளுக்காக 100 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை வலியுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews