தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews