
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்திலுள்ள 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும், வவுனியாவில் ஒரு பாடசாலையும், முல்லைத்தீவில் 7 பாடசாலைகளும் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
வானிலை சீரடைந்ததன் பின்னர் பாடசாலைகள் மீள திறக்கப்படும் என வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.