கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து மாலைதீவு நோக்கி பயணித்த ஏர்பஸ் ஏ-330 ரக விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பத்து நிமிடத்தில் தரையிறக்கம்
குறித்த விமானம் புறப்பட்ட பத்து நிமிடங்களில் தரையிறங்கப்பட்டதையடுத்து அதிலிருந்த 201 பயணிகளையும் மற்ற விமானங்களில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விமானத்தை பழுதுபார்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் தொகை செலவிடப்படுவதால் அதனை மீண்டும் கட்டுநாயக்கவிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம்
தற்போது, இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலைய முற்றத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக டிசம்பர் 17 ஆம் தேதி, கட்டுநாயக்காவில் இருந்து பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு புறப்பட்ட UL 563 என்ற விமான இலக்கத்தை கொண்ட A330 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.