யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி போலீஸ் பிரிவில் பல இலட்சம் பெறுமதியான போதைப்பருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் பருத்தித்துறை நீதிகன்றில் முற்படுத்தப்பட்ட வேளை குறித்த மூன்று சந்தேக நபர்களுக்கும் பதின்நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவளை இன்று பிற்பகல் போதைப்பொருள் குற்றச்சாட்டு மற்றும், திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்களும் , ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து ரூபாய் 676500 பெறுமதியான கஞ்சா மற்றும் ஆபத்தான போதைப் பொருட்களும், நூறு லிட்டர் கசிப்பு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட கைத் தொலைபேசிகளும், ஐந்து வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் ஆபத்தான மது போதை குற்றச்சாட்டு, திருட்டு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்நேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன் அவர்களை நாளை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் ஏடுக்கப்பட்டு வருவதாக நெல்லியடி போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கைதுகள் நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான விசேட போலீஸாரால் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.