
தென்னிந்திய நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் தம்பதியினரின் மகன் ஷானின் 05 ஆவது பிறந்ததினத்தின கொண்டாட்டமானது 20.12.2023 அன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலை புகுந்த வீட்டின் வாஸ்த்துதலத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
முற்றவெளியில் நடைபெறவுள்ள பிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரன் அவர்களது இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகை ரம்பா அவர்கள் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இந்நிலையில் காலநிலை சீரின்மை காரணமாக அந்த இசைநிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் ரம்பாவின் மகனின் பிறந்ததினம் நேற்று என்பதனால் யாழ்ப்பாணத்திலேயே பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.