
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் – ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக இன்று (22.12.2023) அதிகாலையில் இஸ்லாமாபாத் மற்றும் பிற பகுதிகளை உலுக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.