
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நற்சான்றுப் பத்திரத்தை வழங்கினார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜூலை 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக சந்தோஷ் ஜா பணியாற்றினார். ஜூலை 2017 முதல் ஜூன் 2019 வரை, வொஷிங்டன் டிசியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தனிப்பட்ட தூதராகப் பணிபுரிந்தார்.
2010 முதல் 2013 வரை பிரஸ்ஸல்ஸில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.