அபிவிருத்திகளை கண்காணிக்க பிரதேச மட்டக் குழுக்கள் – சொண்ட் நிறுவனப் பணிப்பாளர் செந்தூர்ராஜா தெரிவிப்பு!

நீடித்து நிற்கும் நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களை உரிய முறையில் கண்காணிப்பதற்கு பிரதேச மட்டக் குழுக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்தூர்ராஜா தெரிவித்தார் .

யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம் பெற்ற புத்திஜீவிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான நீடித்தது நிற்கும் நிலையான அபிவிருத்தி திட்டங்களை கண்காணிப்பதற்கான மாவட்ட மட்ட குழு அங்குராப்பன நிகழ்வுகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நிர்மாண அபிவிருத்தியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது தொடர்பில் ஏற்கனவே இடம் பெற்ற எமது கலந்துரையாடல்களில் கூறப்பட்டது.

அது தொடர்பில் கவனம் செலுத்திய சொண்ட் நிறுவனம் ஏனைய ஒன்பது நிறுவனங்களையும் பங்குதாரர்களாக இணைத்து மக்களுக்கான அபிவிருத்திகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கு எமது ஆலோசனைகளை வழங்கவுள்ளோம்.

எமது மாவட்ட மட்டக் குழுவில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்கள் , ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர்கள் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் உற்பட புத்திஜீவிகள் மதத்தலைவர்கள் கடமைகளில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றின் பிரதிநிதிகளை இணைத்துக் கொண்டு எமது பரிந்துரைகளை வழங்க உள்ளோம்.

குறிப்பாக ஒரு நிலைத்து நிற்கும் நிர்மாண அபிவிருத்தி திட்டமானது சரியான முறையில் திட்டமிடாத நிலையில் மேற்கொள்ளப்படும் ஆயின் அது தொடர்பில் எமது குழு ஆராய்ந்து திணைக்களம் அமைச்சு அல்லது ஜனாதிபதி செயலகம் வரை கருத்துக்களை முன்வைப்போம் .

எமது இலக்கு மக்களுக்காக வழங்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை உரிய தரப்பினர் உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு எமது கண்காணிப்பையும் தவறான வழியில் செல்லும் போது அதனை சரியான பாதையில் செயல்படுத்துவதற்கு உரிய தரப்பினருக்கு அழுத்தங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி சரியான வழியில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதே எமது இலக்கு.

ஆகவே மக்களுக்கான சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச மட்டத்தில் இருந்து கண்காணிப்புக் குழுக்களை தெரிவு செய்து மக்களுக்கான சரியான அபிவிருத்தியை மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews