விந்துலை கிளன் ஈகல் தமிழ் வித்தியாலயத்தில் கற்பித்த  ஆசிரியைக்கு நீதி வழங்கிய மனித உரிமை ஆணைக்குழு…..!

விந்துலை கிளன் ஈகல் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பித்த ஆசிரியையான றோகினி கிளாறோ எனும்  ஆசிரியருக்கு  எதிராக அதிபர் இரண்டு  மாத சம்பளம் வழக்காது நிறுத்திவைத்ததுடன் அவருக்கு பல வழிகளிலும் உள நெருக்கடிகளையும்  கொடுத்துவைத்ததுடன் அவருக்கு ஏதிராக பலவகையான அவதூறுகளை ஏற்படுத்தியும் வந்துள்ளார். இந்நிலையில் அவர் இலங்கை ஆசிரியர் சங்க நுவரெலியா மாவட்ட கிளையை அணுகியதுடன் அவர்கள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட கிளையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 20/12/2023 அன்று குறித்த முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு வழங்கவேண்டிய சம்பள நிலுவை உட்பட அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறும் மனித உரிமை ஆணைக்குழுவின் நிவரெலியா மாவட்ட இணைப்பாளரால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


அன்றைய விசாரணை இடம் பெற்ற நாளில்  இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் இலங்கை ஆசிரியர்  சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர்களான செந்தில் சிவஞானம்,  வேலு இந்திரச்செல்வன் ,திருமதி காஞ்சனாதேவி கிருபாகர் ஆகியோரும் ஆசிரியை சார்பாகவும் கலந்துகொண்டதுடன் எதிராளிகள் சார்பில் நுவரெலியா கிளங்கன் தமழ் வித்தியாலய  அதிபர் திரு செல்வராஜா , நுவரெலியா வலய கல்வி அலுவலக திட்டமிடல், ஒழுக்காற்று உதவி கல்வி பணிப்பாளர் திருமதி.லேக்கா ஓஷதி ஹேரத் ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

விசாரணைகளின் போது இரு தரப்பினரும் தத்தமது  கருத்துக்களும் முன் வைத்த  நிலையில்  அதிபர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கண்டி மாவட்ட மனித  உரிமைகள் ஆணைக்குழு ஆசிரியர் சார்பாக தீர்ப்பளித்துள்ளதுடன்  பெண் ஆசிரியர்களுககு இவ்வாறான இன்னல்கள் தற்போது கல்வி நிர்வாக சேவையினரால் இழைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய ஆணையாளர்,  ஆரம்பக்காலங்களில் இவ்வாறான இன்னல்கள் பொலிஸ் நிலையங்களில் இருந்தே கிடைத்ததாகவும்  தற்போது அதிகமாக கல்வித்துறையிலிந்து கிடைப்பது வருத்தத்தை தருவதாகவும் குறிப்பிட்டார்.
ஆசிரியைகள் மாணவர்களுக்கு நிர்வாகத்திர்களால் கொடுக்கப்படும் இன்னல்கள், தொந்தரவுகளை கண்டிப்பதாகவும் தெரிவித்த ஆணைக்குழு  மீண்டும் இவ்வாறான செயற்பாடுகள் நடைப்பெற கூடாது எனவும் எதிர்வரும் 28.12.2023 ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர்க்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தும் கையளிக்கப்பட்டு அவரது பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததுடன்  இதற்காக எதுவித சலுகைக்காலமும் வழங்கப்பட மாட்டாது எனவும்  தெரிவித்த ஆணையாளர் தவறும் பட்சத்தில் உயர்நீதிமன்ற ஆனணயை தவறியதாக கருதி மனித உரிமை ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  பாடசாலை நிர்வாகத்தினுள் தீர்க்கக்கூடிய இவ்வாறான சிறிய பிரச்சினைகளை மனித உரிமை ஆணைக்குழுவிற்க்கு  கொண்டு வரும் அளவிற்கு நடந்து கொள்வது நிர்வாகத்தினருக்கு அழகல்ல எனவும்,  இவ்வாறான நிலைகள் ஆணைக்குழுவின் காலத்தினை வீணடிக்கும் செயற்பாடு என கூறிய அவர் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தவிக்கப்பட வேண்டும் எனவும் அதிபர் உட்பட்ட நிர்வாகத்தினரை எச்சரித்தார்.

உரிய காரணமின்றி இடைநிறுத்தப்பட்ட இரண்டு மாத  சம்பளத்தை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பல முறை நுவரெலியா வலய கல்விப்பணிப்பாளர், மேலதிக வலயப்கல்விப்பணிப்பாளர், கிளனீகளஸ் தமிழ் வித்தியாலய அதிபர், ஆகியோரை கோரியும் தனக்குரிய சம்பளம் வழங்கப்படாமையினாலேயே அவர் இலங்கை ஆசிரியர் சங்கத்தினூடாக  கண்டி மனித உரிமை ஆனணக்குவில் முறைப்பாடு செய்திருந்தார்  என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திர செல்வன் ஊடகங்களுக்கு தெரிவித்ததுடன் குறித்த ஆசிரியர் கடந்த 2016.5.16 அன்று தனது முதல் நியமனத்தை மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின்  நியமனதிற்கு அமைய அதி கஷ்ட பிரதேச பாடசாலையான குறித்த   நுவரெலியா கிளனீகள்ஸ் தமிழ் வித்தியாலத்திற்கு ஆசிரியர் உதவியாளராக நியமனம் பெற்று அங்கு சேவையாற்றி வந்தார் என்றும் ல, தொடர்ந்து தனது ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்ததன் பின்னர்  2019.10.01 அன்றிலிருந்து  நுவரெலியா மெரையா தமிழ் மகாவித்தியாலதிற்கு ஆசிரியர் சேவை 3 .1 ஆசிரியராக மத்திய மகாண கல்வி அமைச்சின் செயலாளரின் நியமனகடிதத்திற்கு அமைய  ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ள நிலையில்  2022.6.7 ஆம் திகதி நுவரெலியா கல்வி தினணக்களத்தின் மேலதிக கல்விப்பணிப்பாளரினால் ஆசிரியர் இடமாற்ற சபை அனுமதியின்றி குறித்த ஆசிரியருக்கு  மீண்டும் நுவரெலியா கிளனீகள்ஸ் தமிழ் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பபட்டிருந்தது.


இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர். மத்திய மகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் போன்றவர்களின் கவனத்திற்கொண்டு வந்த போதும் மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தலையும் மீறி கடந்த இரண்டு மாதங்களாக குறித்த ஆசிரியைக்கு சம்பள நிறுத்தப்பட்டது.  அவ்வாசிரியர் கல்வி திணைக்களத்திற்கும்,  கிளனீகள் தமிழ் வித்தியாலயத்திற்க்கும் அழைக்கப்பட்டு அவரின் பொறுப்புக்கள்,   என்பவற்றை ஒப்படைக்குமாறு கூறி அசெளகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் .  நுவரெலியா கல்வி திணைக்களத்திற்கு சென்று திரும்புவதற்கு 720 ரூபாவும் ,கிளனீகள் பாடசாலைக்கு சென்று திரும்புவதற்கான போக்குவரத்து செலவு 2100 ரூபாவாகவும் காணப்பட்ட நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்  பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்  ஆசிரியர் உதவியாளாராக பணிப்புரிந்த போது பொறுப்புகளை அதிபர்,  ஆசிரியர் உதவியாளருக்கு ஆசிரியருக்கான பொறுப்புகளை ஒப்படைக்க முடியாது என்றும் அதேவேளை மாகாண கல்வி செயலாளரின் கடிதத்திற்கு புறம்பாக,  வலய மேலதிக கல்வி பணிப்பாளரினால் இடமாற்ற குழுவின் அனுமதியின்றி கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டமை மாகாண மேலதிக கல்விபணிப்பாளரின் அறிவுறுத் தல்களையும் மீறியே  இரண்டு மாதச் சம்பளத்தை நிறுத்திவைத்திருந்டாகவும் இந்திரச்செல்வன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews