
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கைதீவு பகுதியில் இருந்து 16 மஞ்சள் மூடைகள் இன்றையதினம் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட மூடைகளில் 400 கிலோ மஞ்சள் காணப்பட்டதாக அறியப்படுகிறது.




இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையிரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மீன்பிடி படகு ஒன்றில் இருந்து இந்த மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.