சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் நிறைவு!

சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

அதன்படி, 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் தேசிய நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இன்று கொண்டாடப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய ஒலி எழுப்பும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews