யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் இயங்கும் தீம்புனல் பத்திரிகையின் ஊடகவியலாளரும், அதன் முகாமைதுவ பணிப்பாளருமாண சாந்தலிங்கம் வினோதன் பருத்தித்துறை பதில் பிரதேச செயலர் சிவசிறியின் முறைப்பாட்டை அடுத்து பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வல்லிபுரம் குருக்கட்டு சித்தி விநாயகர் ஆலயத்தில் தனியாரால் பராமரிக்கப்பட்டுவரும் அன்னதான மண்டபத்தில் பிரதேச செயலர் தலமையில் ஒன்றுகூடல் ஒன்று இடம் பெற்றுக் கொண்டிருந்தவேளை குறித்த அன்னதான மண்டத்தை பராமரித்துவரும் தீம்புனல் பத்திரிகையின் ஊடகவியலாளரும், முகாமைத்துவ பணிப்பாளருமான சாந்தலிங்கம் வினோதனின் தந்தையான சாந்தலிங்ம் ,அவரது மகனான வினோதனுடன் சென்று குறித்த அன்னதான மண்டபத்தை நாம் பராமரிப்பு வருகின்றோம். நீங்கள் அந்த வகையில் எமக்கு சொல்லாமல் இவ்வாறு கூட்டம் நடாத்தமுடியும் என கேட்டுள்ளதுடன் அங்கு கூட்டம் நடந்துகொண்டிருந்ததை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பதில் பிரதேச செயலாளர் நான் பிரதேச செயலாளர் எனக்கு அதிகாரம் உண்டு என்று கூறி தனது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறியதால் பருத்தித்துறை பொலிஸார் தீம்புனல் நிர்வாக இயக்குனரும் , ஊடகவியலாளருமான சாந்தலிங்கம் வினோதனை கைது செய்து தற்போது பருத்தித்துறை பொலிச் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்லார். த
இது தொடர்பில் பருத்தித்துறை பதில் பிரதேச செயலர் சிவசிறியை தொடர்புகொண்டு கேட்டபோது தனது பிரதேசம் என்றும் மக்களின் முறைப்பாட்டை அடுத்து தான் அங்கு சென்றதாகவும், குறித்த அன்னதான மண்டபம் தனியாரால் பராமரிக்கப்பட்டாலும் பிரதேச செயலர் என்ற அடிப்படையில் தனக்கு எங்கும் செல்ல அதிகாரம் உண்டு என்றும், குறித்த மண்டபம் மக்களின் பணத்தில் கட்டப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இதே வேளை குறித்த ஆலயம் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு ஒன்று இடம் பெற்றுவருகின்ற நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலரால் ஒருதரப்பிற்கு மட்டும் அறிவித்த குறித்த கூட்டத்தை நடாத்தியதாகவும் எதிர் தரப்பால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.