ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்கவுள்ளேன் என தெரிவிக்கவில்லை! விக்கி எம் பி,

நான் யாரிடமும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளேன் என தெரிவிக்கவில்லை,, ஆனால் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அவ்வாறு ஒரு கோரிக்கையினை வைத்தால் நான் அதை செயற்படுத்துவேன் என கூறினேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார்

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

கடந்த வாரம் என்னுடன்  சில ஊடகவியலாளர்கள் வந்து உரையாடினார்கள் பல்வேறுபட்ட கேள்விகளை கேட்டார்கள் நான் பதிலளித்திருந்தேன்

அப்போதுதான் அவர்கள் கேட்டார்கள் தமிழ் மக்கள் சார்பில் யாராவது ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினால் நல்லம் தானே என அதற்கு நான் கூறியிருந்தேன்  ஒருவரின் பெயரை கூறி அவரை வேட்பாளராக களமிறக்கினால்நல்லது  அவர் இலங்கைக்காக ஆசிய கிண்ணத்தில் தங்கப் பதக்கத்தினை வென்றவர் என்பதனால் அனைவரும் அறிந்திருக்கக் கூடியவர் என்ற ரீதியில்

ஆனால் நான் அவரை  தொடர்பு கொண்டு  வினவிய போது தனது சுகயீனம் காரணமாக முடியாது என கூறிவிட்டார் எனக்கூறினேன்.

அப்போது  ஊடகவியலாளர்கள் தான்  கேட்டார்கள் உங்களை களமிறங்குமாறு  ஏனைய கட்சிகள் கேட்டால் உங்களது நிலைப்பாடு என்ன என்று?

அதற்குத்தான் நான் கூறினேன். அனைத்து கட்சியினரும் என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு கூறினால் நான் அதை செயற்படுத்துவேன் என கூறினேனே தவிர  எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வுள்ளேன் என தெரிவிக்கவில்லை

அதனை ஊடகவியலாளர்கள் தான் கேட்டார்கள் அவர்களே செய்தியாக பிரசுரித்துள்ளார்கள். எனவும் தெரிவித்தார்,

Recommended For You

About the Author: Editor Elukainews