
அங்கொட – வல்பொல பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
45 வயதுடைய வல்பொல – விஜிதபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த நபர் மேலும் மூவருடன் இணைந்து இந்த விருந்துபசாரத்தை நடத்தியுள்ளதாகவும்இ அதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 62 வயதுடைய வல்பொல பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.