
விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரம் மயூரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் முச்சக்கர வண்டி சாரதியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் (24) இரவு முச்சக்கர வண்டியில் செல்லும்போது குப்பிழானில் விபத்து சம்பவித்தது. இதனால் அவர் முச்சக்கர வண்டியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள புளியமரத்தில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.