
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரை பகுதியில் அழகான சிற்ப வேலைகள் பொருந்திய படகு போன்ற ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

படகில் தாய்லாந்து நாட்டுக்கொடி காணப்படுகிறது.

குறித்த அழகான மர்ம பொருள் கரை ஒத்துங்கிய நிலையில் அது தொடர்பாக கிராம சேவையாளர் ஊடாக கடற்படைக்கு அறிவித்த நிலையில் கடற்படையினர் அதனை தற்போது கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிரக்கின்றனர்.


இதேவேளை இவ்வாறு கரை ஒதுங்கிய அலங்கரிக்கப்பத படகை அதிகளவான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.