
சுகயீனமுற்றிருந்த பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் அது பலனளிக்காத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.