வவுனியாவில் கொரோனா பரவல் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது செயற்படல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்றுகூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டட வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
அந்தவகையில், மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கட், தர்மலிங்கம் வீதியில் இலத்திரனியல் விற்பனை நிலையம், குருமன்காடு பகுதியில் சுப்பர் மார்க்கட் ஒன்று, ஹொரவப்பொத்தானை வீதியில் இரு வர்த்தக நிலையங்கள் என 5 வர்த்தக நிலையங்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டன.