எரிவாயு விலை அதிரடியாக உயர்ந்தது

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,250 ரூபாவாகும்.
அத்துடன், 05 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 276 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்.

மேலும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 127 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 795 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் திடீரென ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews