இலங்கைக்கு கீழாக காணப்படும் காற்றுச் சுழற்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமழையானது எதிர்வரும் 04.01.2024 வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளதாக சிரேஷ்ட வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய குளங்களான சேனநாயக்கா சமுத்திரம் மற்றும் உன்னிச்சைக் குளங்களின் மேலதிக உபரி நீரை வெளியேற்றும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 04.01.2024 வரை மழையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே தாழ்நிலப் பகுதிகளில் உள்ள கிழக்கு மாகாண மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.