நாட்டின் பணவீக்கத்தை தனி பெறுமதியில் பேணுவதால் வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு, மொத்த தேசிய உற்பத்திக்கு நிகராக 11.2% காணப்படுவதோடு 2026 ஆம் ஆண்டில் அதனை 15% வரையில் அதிகரித்துக்கொள்ளஎதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்கருத்துத் தெரிவிக்கும்போதே
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது 350 பில்லியன் ரூபாவிற்கும்அதிகமான கட்டணங்கள் செலுத்தப்படாமல் இருந்தன.
2023 டிசம்பர் 15, ஆகும்போது, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கானகொடுப்பனவுகளையும் முழுமையாக செலுத்த முடிந்துள்ளது.
2024 முதல், ஒரு மாதத்திற்கு மேல் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படாத வகையில் கொள்கை ரீதியான
இணக்கப்பாட்டுடன் அரசாங்கம் செயல்பட்டு வருவதோடு
மேலும், 2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி
இறுதியில் அல்லது பெப்ரவரி மாதம் ஆரம்பத்தில் கோரப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
20 இலட்சம் பேருக்கு இந்த நிவாரணங்களை வழங்குவதே எமது இலக்கெனவும் 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சில குறைபாடுகளைத் தவிர்த்து நிவாரணங்களைப் பெற வேண்டிய
குழுவைக் கண்டறிந்து அவர்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.