முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள், சாதாரண தர பரீட்சையில், உயர்ந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அந்தவகையில், பாஸ்கரன் கதிர்ஷன், சிவகுமாரன் ரிலக்ஹி இருவரும், 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். சண்முகநாதன் தமிழினி, சபேசன், சதுர்ஷிகா, தமிழ்ச்செல்வன் கோபிகா, இரவிந்திரரா சாபிருந்தா ஆகிய மாணவர்கள், 8ஏ பெற்று, சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் 144 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி, 80 வீதமான மாணவர்கள், கணித பாடத்துடன் சித்தியடைந்துள்ளதாக, கல்லூரி முதல்வர் இ.நேவிட்ஜீவராஜா குறிப்பிட்டார்.