இலங்கை முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நாட்டில் பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் அதிகமாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 750 ரூபாயாகவும், பீட்ரூட்டின் விலை 380 ரூபாவாகவும், கோவாவின் விலை 500 ரூபாவாகவும், போஞ்சியின் விலை 600 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
அதே போன்று லீக்ஸ் மற்றும் தக்காளி உள்ளிட்ட ஏனைய மரக்கறிகளின் விலையும் தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.
மரக்கறிகளின் விலை உயர்வால் நுகர்வோர் காய்கறிகளை வாங்க வருவதில்லை என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.