கடந்த சில நாட்களாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் அத்தோட்டத்தில் உள்ள எட்டு பிரிவுகளில் உள்ள தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களை இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு வந்து சிறுத்தைகள் கொண்டு செல்வதாக அத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் பணிக்கு செல்லும் இவர்கள் தற்போது சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பீதியில் உள்ளனர்.
தேயிலை தோட்டங்கள் பல தற்போது காடாக மாறியதால் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அனைத்து தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகம் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.