7ம் திகதி முதல் காங்கேசன்துறை- அனுராதபுரதபுகையிரத சேவை இடம்பெறும்!

எதிர்வரும் 7ம் திகதி முதல் காங்கேசன் துறை அனுராதபுரத்துக் கிடையில் 2புகையிரதசேவை இடம்பெற வுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அத்தியட்சகர் சுரேந்திரன் தெரிவித்தார்

புகையிரத பாதை திருத்த பணிக்காக காங்கேசன்துறை  கொழும்பு புகையிரத சேவை நிறுத்தப்படவுள்ளமை தொடர்பில் டான் செய்திபிரிவுக்கு கருத்துரைக்கும் போது  மேற்கண்டவாறு தெரிவித்தார்மாகோ முதல் ஓமந்தை வரையான புகையிரத  புனரமைப்பு திட்டத்தின் முதலாம் பாகம் ஓமந்தை முதல் அனுராதபுரம் வரை கடந்த வருடம் ஜனவரி மாதம்  முதல் ஆறு மாதங்களுக்கு இடம்பெற்று முடிவடைந்த நிலையில் இப்போது இரண்டாம் பாகமான அனுராதபுரத்தில் இருந்து மாகோவரையிலான சுமார் 65 கிலோ மீற்றர் நீளமான புகையிரதபாதை புனரமைப்பு செய்யப்படவுள்ளது

இந்த புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் 6 திகதி முதல் அனுராதபுரம் மற்றும் மாகோவுக்கு இடையிலான 65 கிலோ மீற்றர் புகையிரதபாதை மூடப்படுகின்றது இக்கால பகுதியில் காங்கேசன்துறையிலிருந்து அனுராதாபுரம் வரை இரண்டு புகையி சேவைகள் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அதேபோல ஏற்கனவேஇடம்பெறும் உள்ளூர் புகையிரசேவைகளும் வழமை போல் இடம்பெறும்

மேலும் காங்கேசன்துறை  கொழும்பு புகையிரதத்திற்கான

முற்பதிவு ஆசனங்களுக்கான பற்றுச் சீட்டுகள் எதிர்வரும் 6 ம் திகதி வரை அனைத்தும்

முற்பதிவு செய்யப்பட்டுள்ளதன்  காரணமாக சாதாரண டிக்கெட் பயணிகள் மாத்திரம் அந்தந்த போயிருந்த சேவை நேரத்தில் தமது டிக்கெட்டுகளை பெற்று பயணிக்க முடியும்எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews