வற் வரி அதிகரிப்பால் நடுத்தர மற்றும் கீழ் மட்டங்களில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அன்று வற் வரியை குறைத்து தனது பதவியை இழந்தார். அதேபோல ரணில் விக்கிரமசிங்க இன்று வற் வரியை அதிகரித்து தனது பதவியை இழக்கப் போகின்றார் எனவும் தெரிவித்தார்.
வற்வரி அதிகரிப்பையே இந்த அரசு மக்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது.
விலை அதிகரிப்பு, பொருட்கள் தட்டுப்பாடு போன்ற செய்திகளே புத்தாண்டில் வெளிவருகின்றன.
இந்நிலையில் வற் வரி அதிகரிப்பால் நடுத்தர மற்றும் கீழ் மட்டங்களில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களுக்கும் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வருடம் தேர்தல் வருடம், இந்த அரசை விரட்ட மக்கள் தீர்மானித்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.