
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் லகுகல கிராம சேவகர் பிரிவில் 60 குடும்பங்களுக்கும், பாணம அபயபுர பகுதியில் 110 குடும்பங்களுக்கும் பாணம கிழக்கு கிராம சேவகர் பிரிவில் 30 குடும்பங்களுக்குமாக மொத்தம் 200 குடும்பங்களுக்கு ரூபா 700000 பெறுமதியான உலர் உணவு பொருட்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் நேரில் சென்று வழங்கிவைத்தார்.
இதே வேளை கடந்த 28/12/2023 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் உள்ள செங்கதிர் முன்பள்ளியில் கல்வி கற்கும் 10 மாணவர்களுக்கு, கேப்பாப்புலவு சூரி முன்பள்ளியில் கல்விகற்க்கும் 30 மாணவர்களுக்கும் 55000/- பெறுமதியான புத்தகபைகள், மற்றும் பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் ஜெர்மனியை சேர்ந்த திருமதி மனோன்மதி அவர்களது பிறந்த நாள் கொடையாக பிலக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் 18. குடும்பங்களுக்கும், வற்றாப்பளை கிராம சேவகர் பிரிவில் 35. குடும்பங்களுக்கும், 265000 பெறுமதியான உலர் உணவு பொறிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வான கடந்த 29/12/2023 அன்று வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த பெண் தலமைத்துவ குடும்பத்தை சேர்ந்த வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய தரம் 9 இல் கல்வி கற்க்கும் மாணவி ஒருவருக்கும், உடுவில் தெற்கு பட்டியோடையை சேர்ந்த. பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பம ஒன்றிற்க்கு வீடு திருத்த பணிகளுக்காக ரூபா ஒரு இலட்சமும், வழங்கப்பட்துடன் யாழ் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான தெரிவு செய்யப்பட்ட 120 குடும்பங்களுக்கு 300000 பெறுமதியான உலர் உணவு பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையால் இன்று தினம் திருவாசக முற்போதல் நடாத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 30/12/2023 அன்று சிறிரமணசிரிகளின் 144 வது பிறந்ததின நிகழ்வாக ஓய்வு பெற்ற அதிபர் செ. பரமேஸ்வரன், ஆசிரியர் துரை கணேசமூர்த்தி, ஆகியோரால் சிறிரமணமகரிசி அவர்களின் தொடர்பான ஆத்மீக உரை நிகழ்த்தப்பட்டது.
குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் தொண்டர்கள் சகிதம் வழங்கிவைக்கப்பட்டன.


