
கொஹூவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கீழே தள்ளிவிழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று, கொஹூவல பொலிஸார் தெரிவித்தனர்.
பலபொகுன பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபரை களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் களுபோவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.