பரபரப்பாகும் தென்னிலங்கை-சற்றுமுன் அதிவிசேட வர்த்தமானி

பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுன் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வௌியாகியுள்ளது.

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தீர்வை வரி கட்டளை சட்டத்தின் நோக்கத்தின் பிரகாரம் ஒரு துறைமுகத்திற்குள் பிரவேசிக்கும் கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், எண்ணெய் அல்லது எரிபொருட்களை கொண்டு செல்லல், இறக்குதல், களஞ்சியபபடுத்தல், ஒப்படைத்தல் மற்றும் வெளியேற்றல் தொடர்பான சேவைகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மற்றும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட விமான போக்குவரத்து சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews