
இதன் ஆரம்ப நிகழ்வு இன்றையதினம் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சார்பாகா அரசியல் ஆலோசகர் திரு. ஜோதிலிங்கம், வடக்கு மாகாண கடற்றொழில் சமாசம் சார்பாக அ.அன்னராசா, தந்தை செல்வநாயகம் அறக்கட்டளையினர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு கையொழுத்திட்ட மகஜரானது யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

