
அன்பிற்கினிய சமூக நேசர்களே,
கடந்த நாட்களில் நேரடியாகவும் மெய்நிகர் வழியாகவும் கலந்துரையாடியதன் அடிப்படையில், ‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து’ ப் பிரதிகளை காலக்கிரமத்தில் தயார்படுத்தி, எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குள் வடக்கிற்கு வருகைதரும் ஜனாதிபதி அவர்களுக்கு நேரில் கையளிக்க வேண்டியுள்ளது.
ஆகவே, சமூக பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் இயன்ற விரைவில் தத்தமது ஒத்துழைப்புக்களை நல்கி இச் செயற்கருமம் ஈடேற துணைநிற்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அந்தவகையில்,
4ஆம் திகதியான இன்றைய தினம் வியாழக்கிழமை 2 மணிக்கு, யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பிக்கப்படவுள்ள கையெழுத்து சேகரிக்கும் நிகழவிடத்திற்கு வருகைதந்து உங்களது கையெழுத்துக்களை இட்டுச் செல்லுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றியுடன்,
மு.கோமகன்
ஒருங்கிணைப்பாளர்,
குரலற்றவர்களின் குரல் அமைப்பு.