காணாமல் ஆக்கப்பட்ட சங்க பிரதிநிதி ஜெனிற்றாவின் வீட்டுக்கு சென்ற பொலிஸார்

இன்று காலை வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க பிரதிநிதி ஜெனிற்றாவின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை உள்ளடக்கிய நீதிமன்ற உத்தரவை உள்ளடக்கிய மனுவை வழங்க சென்றிருந்தனர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் அற்ற வேளை பொலிஸார் திரும்பிச் சென்று மீள வீட்டிற்குள் காலணிகளுடன் நுழைந்து கதவில் நீதிமன்ற உத்தரவை ஒட்டி விட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் யாழ்ப்பாண மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினாலும் நேற்றையதினம் அழைப்பு கட்டளை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்டத்திலும் போராட்டம் மெற்கொள்ள கூடாது என்ற அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்டவாறு கதவில் ஒட்டிவிட்டு சென்றனர்.
அந்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நீதிவான் நீதிமன்றம், வவுனியா,
B: AR/22/2024
01.01.2024
2. சிவாநந்தன் ஜெனிரா
இல.119, வீட்டுத்திட்டம், ஸ்ரீராமபுரம், வவுனியா.
குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) இன் கீழான
கட்டளை
2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 03ம் திகதியாகிய இன்று உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வவுனியா தலைமைப்பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் தோன்றி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இதில் காணப்படும் விடயங்களை ஆராய்ந்து பார்க்கையில், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) இன் கீழான கட்டளையொன்றை ஆக்கத்தேவையொன்று ஏற்பட்டுள்ளதாக மன்று கருதுவதுடன், குறித்த முறைப்பாட்டில் வவுனியா நகரசபையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 05ம் திகதி அரச கடமைகளில் ஒன்றான மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ளடங்கியவாறு அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரச உயரதிகாரிகள் பிரசன்னமாகி அதுதொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும். அதனடிப்படையில் பொதுப் போக்குவரத்து மற்றும் குறித்த பகுதிகளில் காணப்படுகின்ற சூழலுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தும் விதமாக வீதியினை மறித்தோ அல்லது அப்பிராந்தியத்தினை குழப்பும் நடவடிக்கையொன்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதுதொடர்பில் இரகசிய தகவல்களின் அடிப்படையில் பரிசீலனை செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சமர்ப்பித்துள்ளனர். அவ்வாறான ஒரு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மன்றுக்கு அசௌகரியமான பாதுகாப்புக் அறிக்கையொன்றினை ஒழுங்கீனமொன்று கடமைகளில் ஈடுபடுகின்ற தடங்கல்களை மீறி குறித்த பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்து தடங்கல்கல்களிலோ அல்லது ஆர்ப்பாட்டங்களிலோ ஈடுபடக்கூடாது எனவும், குறித்த அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கான அரசகடமைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும், அவ்வாறான அசெளகரியங்கள் எதனையும் மேற்படி உம்மாலோ உம்மால் நடாத்திச் செல்லப்படுகின்ற இயக்கங்களினால் ஏற்படுத்தப்படக்கூடாது என  2024 ஜனவரி மாதம் 06ம் திகதி இரவு 12.00 மணிவரையிலான காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாட்டிலிருந்து விலகியிருக்குமாறு மன்று உமக்கு கட்டளையாக்குகின்றது.
இக்கட்டளையானது 2024 ஜனவரி மாதம் 03ம் திகதி இரவு 12.00 மணியிலிருந்து 2024 ஜனவரி மாதம் 06ம் திகதி இரவு 12.00 மணிவரை அமுலில் இருக்குமென 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(5) இன் பிரகாரம் நீர் தெரியப்படுத்தப்படுகின்றீர்.”
இத்துடன் குறித்த கட்டளையானது உரியமுறையில் உரிய நபர்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது பொலிஸாரின் அழைப்பாணை சேர்ப்பிக்கும் உத்தியோகத்தர் மூலமாகவோ அத்தியட்சகருக்கு உடனடியாக சேர்ப்பிக்குமாறு மன்று வவுனியா கட்டளையாக்குவதுடன் தலைமைப்பொலிஸ் குறித்த பிரதேசத்தில் அவசியமேற்படுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த கட்டளையினை ஒட்டிச்சேர்ப்பிக்குமாறு கட்டளையாக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews