அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது டியோப்ரா ரெட்டன் எனும் 30 வயதான குற்றவாளி பாய்ந்து தாக்கிய காட்சி, நீதிமன்ற கெமராவில் பதிவாகியுள்ளது.
ஒருவரை கடுமையாக தாக்கியதாக டியோப்ரா ரெட்டன் மீது வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.
எனினும், அவருக்கு நன்னடத்தை சோதனை முறையான விடுதலையை (Probation) வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கையை நிராகரித்து, நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் நீதிபதி மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு Mary Kay Holthus எனும் 62 வயதான பெண் நீதிபதியே இலக்காகியுள்ளார்.
காயங்கள் ஏதும் இல்லையென்றாலும் நீதிபதியின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.