உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது.
நாட்டில் தற்போது இயங்கும் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவுக்கு வருகின்றது. எனினும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நிதி உட்பட ஏனைய விடயங்களில் தாக்கம் செலுத்தும் என்பதாலேயே சபையின் ஆயுட்காலத்தை நீடிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆராய்ந்து வருகின்றது எனவும் அறியமுடிகின்றது.
நாட்டில் கடைசியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெற்றது. சபைகளுக்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.