அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, தம்பிக்க, அனுர மற்றும் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதை மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவும், பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்த அவர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்கு இன்னும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.