வடமராட்சி முள்ளியான் J/433 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பிரதேசத்தில் பல இடங்கள் டெங்கு நோய் பரவும் அபாயத்தில் துப்பரவற்றுக் காணப்படுகின்றது.
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாகி பரவி வருவதால் சுகாதாரப் பிரிவினர் சோதனை நடத்தி டெங்கு நோய் பரவக் காரணமானவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பிரதேசத்தின் பல பகுதிகள் துப்பரவற்ற நிலையில் டெங்கு நோய் பரவும் அபாயத்தில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை
மருதங்கேணி சுகாதார பரிசோதகர்கள் உடன் வருகை தந்து நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.