
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கப் ரக வாகனம், கல்லூண்டாய் வைரவர் கோவிலில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமியும் ஆணொருவரும் படுகாயமடைந்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.