
மங்கல சுடர்களினை நிகழ்வின் பிரதம விருந்தினரும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி B.ரேவதி, சிறப்பு விருந்தினர்களான வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் த.தங்கரூபன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், மருதங்கேணி போலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, பருத்தித்துறை பிரதேச சபை மருதங்கேணி உப அகுவலக பொறுப்பு அதிகாரி, உட்பட பலர் ஏற்றிவைத்தனர்.
இதில் வாழ்துரைகளை நிகழவின் பிரதம விருந்தினர், வத்திராயன் கிராம சேவகர், ஆகியோர் நிகழ்த்தினர்.
தொடர்ந்து மாணவர்களுக்கான கோரவத்தினை மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், ஆசிரியர் ரங்கன், வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் த.தங்கரூபன், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இதில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 5 மாணவர்களும், பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் இருவரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வத்திராயன் கிராம அபிவிருத்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

