மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தில் நேற்று (5) இரவு வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் இருந்த மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
இதில் 6 படகுகள், 3 எஞ்ஜின்கள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்துள்ளார்.
வாகரை காயங்கேணி கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடி இயந்திர படகுகளை நிறுத்திவைத்திருந்த நிலையில்,
நேற்றிரவு திடீரென வீசிய மினி சூறாவளி காற்று படகுகளை தூக்கி வீசியதில் 6 படகுகள், 3 எஞ்ஜின்கள் தேசமடைந்துள்ளன.