இந்தியாவின் புதிய சாதனை

ஆதித்யா விண்கலம் எல்-1 சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம், செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து குறித்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

விண்கலம் செயற்படும் காலம்
ஆதித்யாவில் உள்ள எரிபொருளைக் கொண்டு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் விண்கலம் செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் ஆதித்யா எல் – 1 என்ற விண்கலம், நீள்வட்டப்பாதையில் பூமியைச் சுற்றி படிப்படியாக தமது சுற்றுப்பாதையை அதிகரித்து சூரியனை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொண்டு, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள முதல் லக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றி நிலவும் பூச்சிய ஈர்ப்பு விசையுள்ள சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.

இஸ்ரோவின் குறித்த வெற்றியின் மூலம் சூரியன் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் 4ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews