
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 7.30 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 7.30 மணிவரை ஒளியைப் பாய்ச்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
