இன்று காலை அரலகன்வில-மாதுறுஓயா வீதியில் வனஜீவராசிகள் திணைக்கள காரியாலயத்தை அண்மித்த பகுதியில் விபத்துக்குள்ளானவர்களை அகீல் அவசர சேவைப்பிரிவினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வெலிகந்தையில் மரணித்த வெலிகந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தாயாரின் உடலத்தை அவரது வேண்டுகோளின் பேரில் அகீல் அவரச சேவைப்பிரிவு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அரலகன்வில, மாதுறு ஓயா வழியாக அம்பாரை நோக்கிப்பயணித்த வேளையில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
அகீல் அவசர சேவைப்பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நியாஸ்தீன் ஹாஜியாரின் பணிப்பில் உடனடியாகச்செயற்பட்டு விபத்தில் சிக்கி நிர்க்கதியான நிலையில் பலத்த காயங்களுடன் தவித்துக் கொண்டிருந்த சகோதர இனத்தைச்சேர்ந்த குடும்பத்தினரை மீட்டு மாதுறு ஓயா வைத்தியசாலையில் அனுமத்தித்ததுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் அகீல் அவசர சேவைப்பிரிவு மற்றும் கல்குடா டைவர்ஸ் அணியின் செயற்பாட்டாளர் முஹம்மது ஹலீம் மற்றும் ஷக்கி ஆகியோர் வழங்கி இருந்தனர்.
விபத்தில் சிக்கியோர் பற்றி எந்தவித தகவலும் இல்லாத நிலையில், நிர்க்கதியான நிலையிலிருந்தோரை மீட்டு உதவிய மனிதாபிமானச் செயற்பாடு பாராட்டுக்குரியது.