இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட போகும் மாற்றம்

எதிர்வரும் காலங்களில் நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாகவும்
இலங்கையில் பிறப்பு வீதம், 25 வீதம் குறைவடைந்துள்ளமை பிரதான காரணங்களில் ஒன்று என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

2013 இல் நம் நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 90,000 குறைந்துள்ளது.

2013 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கையுடன் 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இது 25% குறைந்துள்ளது. பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை இறப்பு எண்ணிக்கையை நெருங்குகிறது என்றார்.

இளம் சமூகம் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது உட்பட பல காரணிகளால் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் சனத்தொகை குறையலாம் என பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews