அதிபர், ஆசிரியர்கள் தற்போது முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தி, வரவு-செலவுத் திட்டத்தில் நம்பிக்கை வைத்து சேவைக்கு திரும்புமாறு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை நாம் கடுமையாக நிராகரிக்கின்றோம் என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பில் இன்று (25) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். 76 நாட்களாக, அதிபர், ஆசிரியர்கள் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்த தொழிற்சங்க போராட்டத்தை நாம் முன்னெடுத்து வரும்போது பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் சென்றுவந்தோம். ஆரம்பத்தில் சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கோரினோம்.