பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்தி தேடுதல் நடவடிக்கையின் மூலம் இதுவரையில் 28520 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருபது நாட்களில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு 2303 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 1434 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் ஏனையவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சோதனை நடவடிக்கைகளின் மூலம் 70 கிலோ கிராம் ஹெரோயின், 200 கிலோ ஐஸ் போதைப் பொருள், 340 கிலோ கிராம் கஞ்சா, 79147 போதை மாத்திரைகள் என்பன உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த யுக்திய நடவடிக்கைகளின் போது மனித உரிமைகள் மீறப்படுவதாக பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.