ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 161 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் வலுவான பல நிலநடுக்கங்கள் ஏற்படும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1,214 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.