கொழும்பிலுள்ள ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இன்று இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் அனைத்தும் மீண்டும் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளாகவே காணப்படுகின்றது. குறிப்பாக கோட்டாபய ராஜக்ஸவின் அரசாங்கத்தை உருவாக்குவதில் பிரதான காரணமாக இருந்தது உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பிலான அறிக்கைகள். அதேபோன்று மத்திய வங்கியினுடைய கொள்கைள் பிரதான காரணமாகவிருந்தன. அதேபோன்றுதான் எம்.சி.சி ஒப்பந்தமும் பிரதான காரணமாக இருந்தன.
நாட்டை இரண்டாக்கும் இந்த எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் நாளை இலங்கைக்குள் கடவுச்சீட்டுடனேயே பயணிக்கின்ற ஒரு சூழல் உருவாகும் என்ற பிரசாரங்கள் மும்முராமாக இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து இந்த அரசாங்கம் ஆட்சியமைத்தன் பின்னர், இன்று இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டில் மீண்டும் மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
இன்று சில மின்னிலையங்கள், அதிலுள்ள பங்குகள் இரவோடிரவாக அமெரிக்காவுக்கு வழங்குகின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது.
அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்களுக்குக்குகூட தெரியாமல் அமெரிக்காவுக்கு வழங்குகின்றவர்கள் யார் என்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்று ஜனாதிபதி அமெரிக்காவின் உறுப்பினராகக் காணப்படுகின்றார். அதேபோன்று நிதி அமைச்சர் உறுப்பினராக காணப்படுகின்றார். இன்று இவர்களது செயற்பாட்டின் மூலமாக அமெரிக்காவுக்கு நாட்டை தாரைவார்க்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது.